Breaking News

சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து போராட்டத்தில் குதிக்கும் யூட்யூப் பிரபலங்கள்


தமிழகத்தில் தற்போது சென்று கொண்டிருக்கும் காவரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ஆதரவு வந்த வண்ணம் உள்ளது. இந்த விசயங்களில் தீர்வு கண்டே ஆக வேண்டும் எனப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்களும் அமைதி போராட்டத்தின் மூலம் நேற்று ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் மிகப் பிரபலமான யூட்யூப் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அஸ்ஸோசியேசன் எனும் குழுவாக போராட்டம் நடத்த உள்ளனர்.

'நம்மக்கு அவசியமான தண்ணீர் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் போன்ற விசயங்களுக்கு நாம் போராடித்தான் தீர்வை பெற முடியும்.

 தற்பொழுது தொடங்கியுள்ள IPL போட்டிகளால் திசை திரும்பி விடாமல், அப்போட்டிகளை புறக்கணித்து இந்திய அளவில் இந்த பிரச்சனையை பற்றி பேச வைப்போம்' என தங்களுடைய போராட்டத்தின் நோக்கம் பற்றி தெரிவித்து, யூட்யூப் நட்சத்திரங்களான பரிதாபங்கள் கோபி, சுதாகர், ப்ளூ சட்டை மாறன், RJ விக்னேஷ் ஆகியோர் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை எதிர் நோக்கி அழைப்பு விடுத்திருகின்றனர்.   


நடிகர் சங்கம் போராட்டத்தைப் போலவே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருக்கும் இந்த போராட்டத்திற்கு  தமிழக இளைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.