Breaking News

பாகுபலி படத்தினால் தமன்னாவிற்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு


ராஜமௌளியின் இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டது. மேலும் அதன் நடிகர்களுக்கு உலகம் முழுவதும் நல்ல பிரபலமும் கிடைத்தது. அந்த திரைப்படத்தில் பெண் போராளியாக அவந்திகா எனும் கதாப்பதிரத்தில் நடித்திருந்தார் தமன்னா.

பாகுபலியின் முதல் பாகத்தில் அவரின் கதாப்பதிரத்திற்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் இரண்டாம் பாகத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இடம் பெற்றிருந்தார். இதனால் அவர் இயக்குனர் ராஜமௌலியிடம் புலம்பிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.


என்றாலும் அந்த குறையை போக்குவது போல, பாகுபலி படத்தில் அவருக்கு கிடைத்த உலகளாவிய பிரபலத்தால், பாகுபலி போன்று பிரமாண்டமாக உருவாக இருக்கும் மற்றொரு திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடததப்பட்டு வருகிறது.


'சியே ரா நரசிம்ம ரெட்டி' என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படம் தெலுங்கு சுதந்திர போராளி ஒருவரின் கதையை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. சிரஞ்சீவி நாயகனாக நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் இடம் பெற்றிருகின்றனர்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பாகுபலி திரைப்படத்தை போல உருவாக இருக்கும் இந்த திரைப்படம் சீன மொழியிலும் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.