Monday, 9 April 2018

பிராமணன் to புரட்சியாளன்..! NGK திரைப்படத்தில் மிரட்டும் சூர்யா



நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவனின் கூட்டணியில் முதன் முறையாக உருவாக இருக்கும் திரைப்படம் NGK. தீபாவளி பரிசாக திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தில், நடிகர் சூர்யாவின் கதாப்பாத்திரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சமீபத்தில் கசிந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன் வெளியான NGK திரைப்பட போஸ்டர்களில்  பிரபல கியூபா  புரட்சியாளரான சே குவாராவின் கெட்டப்பில் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். மேலும் அதில் இடம் பெற்றிருந்த ஒரு சில குறியீடுகள் கம்யூனிசத்தை வலியுறுத்துவதைப் போல அமைந்திருந்தது.


இந்நிலையில் குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிகர் சூர்யா, சாதுவான பிராமணராக இருந்து பின் ஆக்ரோசமான புரட்சியாளனாக மாறுவதைப் போல கதை நகருகிறதாம். இதனால் நடிகர் சூர்யாவை நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இத்திரைப்படத்தில் பார்க்கலாம்.

முன்னதாக கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஸ்ரீ எனும் திரைப்படத்திலும் இதே போல பிராமணராக இருந்து ரௌடியாக மாறும் காதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.


யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்க இருக்கும் இந்த NGK திரைப்படத்தில் ராகுல் பரீத் சிங் மற்றும் சாய் பல்லவி என இரு கதாநாயகிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();