Breaking News

சூடு பிடிக்குது ஸ்ரீ லீக்ஸ்.. வெளியாகும் அந்தரங்க புகைப்படங்கள்


வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் மோசமான விஷயங்கள் சினிமா துறையின் இருள் சூழ்ந்த மறுபக்கத்தில் மறைந்திருக்கிறது.  சினிமா துறையை பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற ஒன்றாக மாற்றும் இத்தகைய செயல்கள் பற்றி அவ்வப்போது ஒரு சில நடிகைகள் குரல் கொடுத்தாலும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையை எட்டும் போது வேறு வழியில்லாமல் ஒரு சில நடிகைகள் வெளியிடும் அந்தரங்க ஆதராங்கள் 'அடச்சீ..! அரசியல விட அதிகமா நாறிப் போய் கிடக்குது சினிமா துறை' என ரசிகர்கள் கருத்து சொல்லும் அளவிற்கு அமைந்து விடுகிறது.

சென்ற வருடம் பாடகி சுஜித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியான அந்தரங்க புகைப்படங்கள் காணொளிகள் தமிழ் சினிமா உலகையே பரபரப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில் தெலுங்கு சினிமா உலகின் அந்தரங்களை வெளிப்படுத்தும் விதமாக பல நடிகர்களின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர் என தன்னுடன் விளையாடிய ஒவ்வொருவரின் அந்தரங்க பக்கங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டியின் லிஸ்டில் தற்பொழுது சிக்கி இருக்கிறார் பிரபல பாகுபலி நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம்.

அவர் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களுடன் இருவரும் பேசிய ஆபாச வாட்ஸ்அப் சாட்டையும் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. மேலும் பலரின் அந்தரங்கங்கள் வெளிவரும் எனவும் கூறியிருப்பதால், அச்சத்தில் குமறிக் கொண்டிருகின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.