Breaking News

வட இந்திய நடிகைகள் அழைத்த உடன் படுக்கைக்கு சென்று விடுவார்கள் - தெலுங்கு நடிகை குற்றச்சாட்டு


சினிமா துறையில் நடிகர் நடிகைகளை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக பல்வேறு நடிகர் நடிகைகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி என்பவர் சில நாட்களுக்கு முன்பு இதே போன்றவொரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட இயக்குனர் பெயரையும் கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார். இவரின் குற்றச்சாட்டிற்கு தெலுங்கு நடிகர் நடிகைகள் மறுப்பு தெரிவித்த நிலையில், தெலுங்கு திரையுலகில் நடிப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் நடிக்கும் உரிமத்தை மீண்டும் பெரும் நோக்கில் தன் ஆடைகளை கலைத்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு முன், அரசுக்கு சொந்தமான ஸ்டூடியோ ஒன்றினை தெலுங்கு சினிமா உலகினர் ரெட் லைட் ஏரியாவைப் போல உபயோகிப்பதாக கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.



மேலும் குறிப்பிட்ட ஸ்டூடியோவிற்கு அழைத்து சென்று பிரபல தயாரிப்பாளரின் மகன் ஒருவர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், விரைவில் அந்த புகைப்படங்களை வெளியிடுவேன் எனவும் கூறியிருக்கிறார்.


'இது போன்ற பாலியல் ரீதியான தேவைகளுக்கு வட இந்திய நடிகைகள் மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துழைக்கின்றனர். இதன் காரணமாகவே தென்னிந்திய சினிமாவிலும் வட இந்திய நடிகைகளை அதிகம் பார்க்க முடிகிறது' எனவும் கூறி வட இந்திய நடிகைகளை போட்டு தாக்கியுள்ளார்.