Breaking News

பட வாய்ப்பு தருவதாக 100க்கும் மேலான பெண்களோடு உறவு வைத்தார் ; ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர்


தெலுங்கு சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் எனும் பெயரில் இளம் பெண்கள் பலரது வாழ்க்கையை திரையுலகினர் சீரழிப்பதாக பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி முறையிட்டு வருகிறார்.

முன்னதாக சினிமா துறையினர் ஸ்டூடியோக்களை விபச்சார விடுதி போல உபயோகிப்பதாகவும், தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களையும் ஆதராத்தோடு வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார்.


தொடர்ந்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதால் தன்னை தெலுங்கு நடிகர் சங்கத்தில்  இருந்து நீக்கியதற்கு எதிராக, தன் ஸ்ரீ லீக்ஸ் பாணியில் போராடி வெற்றியும் கண்டார். இந்நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரின் முகத்திரையை கிழித்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.


குறிப்பிட்ட அப்பா ராவ் எனும் தயாரிப்பாளர் பட வாய்ப்பு தருவதாக கூறி இதுவரை 100க்கும் மேலான பெண்களோடு உல்லாசமாக இருந்ததாகவும், அதில் 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண்களும் அடக்கம் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஸ்ரீ ரெட்டியின், அப்பா ராவ் குறித்த இந்த குற்றச்சாட்டினை பிற வளர்ந்து வரும் தெலுங்கு நடிகைகளான ஸ்ரேயா, சிவானி, ஸ்ரீதேவி போன்றவர்களும் தானாக முன்வந்து உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.