Saturday, 7 April 2018

சிம்புவின் படத்திலேயே அறிமுகமாக இருந்த சிவகார்த்திகேயன் ; நீண்ட நாட்களுக்கு பின் வெளியான தகவல்


சின்னத்திரை வழியாகவும் சினிமாவில் உச்சத்தை எட்டலாம் என்பதனை சாதித்துக்காட்டி பலருக்கும் இன்று ரோல் மாடலாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2012ம் ஆண்டு மெரீனா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நாயகனாக அறிமுகமானார்.

ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி மெரீனா திரைப்படத்திற்கு முன்னதாகவே, நடிகர் சிலம்பரசனின் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில்  சிவகார்த்திகேயன் அறிமுகமாக இருந்தது தெரியவந்துள்ளது.



விரைவில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கோலமாவு கோகிலா' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ள 'நெல்சன்' என்பவர், கடந்த 2010ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து 'வேட்டை மன்னன்' என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார். பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்ட அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணியாற்றினாராம்.



அது மட்டுமல்லாது ஒரு சிறிய கதாப்பாத்திரத்திலும் நடிதிருந்தாராம். இந்த தகவலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனே தெரிவித்திருந்தார்.

மேலும் இயக்குனர் நெல்சன் ஓரம் கட்டிவைக்கப்பட்டுள்ள வேட்டை மன்னன் படம் விரைவில் தொடரலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். அப்படி ஒரு வேளை தொடர்ந்தால் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த காட்சிகள் இடம் பெறுமா என்பது சந்தேகம்தான்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();