Breaking News

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்ஸின் திரைப்படத்தில் இணையும் வாரிசு நடிகர்

நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என ரசிகர்களிடம் கைதட்டகல்களை வாங்கிக் கொண்டிருக்க படத்தின் உரிமையாளர்களான தயாரிப்பளர்களை ரசிகர்கள் இது வரை கண்டுகொண்டதே இல்லை.

ஆனால் அந்த வழக்கமான நடைமுறையை மாற்றி, இன்று ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் என்ற பெயரை திரையில் பார்த்ததுமே ரசிகர்களின் கரகோசத்தால் திரையரங்குகள் அதிர்கின்றன.

அப்படி, ட்ரீம் வாரியார்  பிக்சர்ஸ் தயாரிப்பு என்றாலே அது அருமையான திரைப்படமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறும் அளவிற்கு ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற உலகத்தரமிக்க திரைப்படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறது இந்நிறுவனம்.


இதன் அடுத்த படமான சூர்யாவின் NGKவினை தொடர்ந்து, மதுபானக்கடை எனும் திரைப்படத்தினை இயக்கிய கமலக்கண்ணன் எனும் இயக்குனரின் திரைப்படத்தினை தயாரிக்க இருக்கிறது ட்ரீம் வாரியார்  பிக்சர்ஸ் நிறுவனம்.


இதில் நடிகர் சத்யராஜின் மகனாக சிபி ராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பத்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் இருந்தும் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடிக்க போராடி வரும் சிபி ராஜிற்கு ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த திரைப்படமானது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படதில்படத்தில் பணியாற்ற இருக்கும் பிற கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.