Saturday, 14 April 2018

ஆசிஃபாவுக்காக மேடையிலேயே கண்ணீர் வடித்த நடிகர் சத்யராஜ்


காஸ்மீர் மாநிலத்தில் ஆசிஃபா எனும் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத வெறி பிடித்த அரசு அதிகாரிகளின் வெறியாட்டத்தினால் பலியான ஆசிஃபாவிற்கு, சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலர் நீதி வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனால் மத்தியில் ஆளும் பாஜாகாவினால் மூடி மறைக்கப்பட்டுவிட முயற்சி செய்யப்பட்ட இந்த விஷயம், தற்போழுது இந்தியா முழுவதும் பரவி இந்திய மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.


இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் ஆசிஃபா பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

பெரும்பாலும் மேடையில் மைக்கை பிடித்து சமூக பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பித்துவிட்டால், தீதெறிக்கும் விதத்தில் ஆவேசமாக பேசும் அவர், ஆசிஃபாவின் பெயரை சொன்னதும் பேச முடியாமல் கண் கலங்கியது காணொளியை பார்த்தவர்களையும் கண் கலங்கச் செய்தது.
 

நிகழ்ச்சி தொடங்கியது முதல் கலகலப்பாக பேசி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்த அவர், கண் கலங்கி 'ஆசிஃபாவிர்காக  ஒரு நிமிட மௌன அஞ்சலி என்றது' அங்கிருந்தவர்களின் நெஞ்சை வருட செய்தது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();