Sunday, 15 April 2018

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த நடிகர்


பிரபல தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சதீஸ் சமூக பிரச்சனைகளின் போது சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து மக்களை சென்றடைய பெரிதும் உதவி வருகிறார். சமீபத்தில் கூட காவிரி, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனைகள் குறித்து தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

நேற்று கூட சிறுமி ஆசிஃபா வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதற்கு, குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார்.


இப்படி தொடர்ந்து தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்து வரும் இவர், தமிழர்களிடையே ஹீரோவாக பார்க்கப் படும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் அவர்களின் வீட்டிற்கு சென்று அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

சினிமா ஸ்ட்ரைக் காரணமாக படப்பிடிப்புகள் இல்லாத நிலையில் நடிகர்கள் பலரும் சுற்றுலா சென்று வருகின்றனர். அப்படி இலங்கைக்கு சென்ற சதீஸ் வல்வெட்டி துறையில் இருக்கும் பிரபாகரன் இல்லத்திற்கு சென்றிருக்கிறார்.

பெரும்பாலும் பிரபாகரன் மீது மரியாதை உணர்வு கொண்டவர்களே அவர்  வாழ்ந்த இல்லத்தை விரும்பி பார்வையிட செல்லும் வேளையில், நடிகர் சதீஸ் சென்றிருந்தது தமிழ் ரசிகர்களிடம் ஒரு தமிழனாக அவர் மீதான மரியாதையை உயர்த்தி இருக்கிறது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();