Breaking News

இது நல்ல ஐடியாவா இருக்கே..! கணவரை பின்பற்றும் நடிகை சமந்தா



நடிகை சமந்தா சினிமா துறையில் முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்ற நடிகைகளில் ஒருவர். அதன் விளைவுதான் திருமணமானப் பின்னரும் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சீம ராஜா, இரும்பு திரை என முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா, தன் கணவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளியிட்டிருந்தார்.

சென்ற வருடம் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா தான் நடிக்கும் படங்கள் குறித்து தன் கணவரிடம் ஒருபோதும் கருத்து கேட்டதில்லை, அவரும் தன்னுடன் எதையும் பகிர்ந்துகொண்டதில்லை.


என் முடிவிற்கு அவர் எப்பொழுதும் தடையாகவும் இருந்ததில்லை. ஒரு படம் நடித்து முடித்து திரைக்கு வந்து, ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் என்னை பெரிதும் பாதித்து விடும். சில நாட்கள் அப்செடாகவே இருப்பேன்.

ஆனால் என் கணவர் ரசிகர்களின் கருத்து குறித்து நம்மால் எதுவும் செய்ய முடியாது, நடிக்கும் போது நம் முழு திறனையும் கொடுத்தால் மட்டும் போது, என கூலாக இருப்பார்.


இப்பொழுது அதைதான் நானும் பின் பற்றுகிறேன். இது என் மன உளைச்சலையும் குறைக்கிறது என்றிருந்தார்.