Tuesday, 17 April 2018

மெட்ரோ தொழிலாளர்களுடன் ரோட்டில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் ; வைரல் வீடியோ


இந்திய கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருக்கும் இவருக்கு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்று விட்டாலும், கிரிக்கெட் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து விடுமா என்ன..? என்பதை போல அவரின் கிரிக்கெட் மீதான காதலை வெளிக்காட்டி வருகிறார்.

இது பற்றி அடிக்கடி கூறி வரும் சச்சின் டெண்டுல்கர், ஆடிய கால்கள் சும்மா இருக்காது என்பதைப் போல, ரோட்டில் மெட்ரோ பணியாளர்களுடன்    உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு மும்பையின் பந்த்ரா பகுதியை கடந்து சென்ற சச்சின் அங்கிருந்த மெட்ரோ பணியாளர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்ததை கண்டிருக்கிறார். சிறிதும் தயங்காமல் உடனே காரை நிறுத்த சொன்ன அவர், அந்த மெட்ரோ பணியாளர்கள் உடன் களத்தில் இறங்கி உற்சாகமாக பேட்டிங் செய்கிறார்.

பார்பவர்களுக்கு புல்லரிக்க வைக்கும் இந்த காணொளியானது, 'மெட்ரோ பணியாளர்களுக்கு அது மிகவும் சிறந்த நாள், அவர்களின் முகத்தில் புன்னகைக்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள்' என ரசிகர்களிடையே அதிக பாராட்டுகளையும் பெற்று வருகிறது.






Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();