Tuesday, 17 April 2018

ஏழ்மையிலும் இப்படி ஒரு உதவும் குணமா..? ரசிகர்களை நெகிழ வைத்த ராக் ஸ்டார் ரமணியம்மாள்


ராக் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும், 'சரி கம ப' எனும் ரியாலிட்டி நிகழ்ச்சிப் போட்டியாளர் ரமணியம்மாள், 63 வயதிலும் சாதிக்க முடியும் என தன் குரல் வளத்தால் நிரூபித்துக் காட்டி இருக்கிறார், குறிப்பிட்ட நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்து சுமார் 10லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசினையும் பெற்றார்.

ரசிகர்கள் அடிப்படையில் அந்த நிகழ்ச்சியில் எப்பொழுதும் டாப்பில் இருந்த ரமணியம்மாள், இறுதி கட்டம் வரை வந்து தோற்றது அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்திருந்தாலும், அங்கீகாரம் கிடைக்காத சிறு பாடகியாக இருந்த அவருக்கு, தற்பொழுது கிடைத்திருக்கும் நல்ல எதிர்காலத்தைப் பார்த்து மனம் ஆறுதல் அடைகின்றார்கள்.



மேலும் தனக்கு கிடைத்த 10 லட்சத்தினை 'தன் பேரக் குழந்தைகளுக்கும், தன்னால் முடிந்த அளவு ஏழை எளிய குழந்தைகளுக்கும் கொடுத்து உதவுவேன்' என ரமணியம்மாள் தெரிவித்து இருந்தது, அவரின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

ஏனென்றால் குடிகாரக் கணவனை பெற்று, குடும்ப சுமைகள் அனைத்தையும் ஒற்றை ஆளாக வீட்டு வேலை செய்து தாங்கியவர் ரமணியம்மாள். சரி கம ப நிகழ்ச்சியின் மூலம், உலகப் புகழ் அடைந்தாலும் இன்னமும் வீட்டு வேலைகளைத் தான் செய்து வருகிறார்.


அப்படி இருக்கையில் கிடைத்த பணத்தை வைத்து, வாழ்கையில் ஒய்வு எடுக்க போகிறேன் எனக் கூறாமல், இந்த தள்ளாத வயதிலும் பிறருக்கு உதவுவேன் எனக் கூறி இருப்பதுதான் ரசிகர்களின் அந்த நெகிழ்ச்சிக்கு காரணம்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();