Tuesday, 10 April 2018

விஜய் சேதுபதி இல்லை..! ரஜினிக்கு வில்லனாகப்போவது இவர் தானாம்


அரசியல் பயணம் குறித்து முடிவு செய்த பின்னரும் நடிகர் ரஜினி தொடர்ந்து நடிக்க போவதாக அறிவித்து, இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் படத்தில் சமீபத்தில் ஒப்பந்தமானார். தன் அரசியல் பயணத்திற்கு ஏற்ற அரசியல் வசனங்களுடனும், கதைக்களத்துடனும் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் வில்லன் நடிகர் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு 45 நாட்கள் கால்சீட் கொடுத்திருக்கிறார் நடிகர் ரஜினி. மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக, நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.


அதில் அவர் நடிக்க முடியாமல் போகவே பிரபல பாலிவுட் நடிகரான 'நவாசுதின் சித்திக்' என்பவரை தேர்வு செய்திருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியிருக்கும் நவாசுதின் 10 விருதுகளுக்கு மேல் பெற்றிருக்கிறார்.


கார்த்திக் சுப்பராஜின் இந்த திரைப்படத்தில் வில்லனுக்கு நாயகனுக்கு இணையான கதாபாத்திரமாம். கதைப்படி அவர்கள் மோதிக் கொள்ளும் அனல் பறக்கும் காட்சிகள்தான் ஹைலைட் என்கிறார் இயக்குனர்.


நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடிகர் சங்க போராட்டங்கள் முடிந்த பின் ஆரம்பமாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகளை, இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கவும் முடிவு செய்துள்ளது படக்குழு.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();