Breaking News

ஹாலிவுட் செல்லும் ரஜினி திரைப்பட நாயகி


பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே கபாலி, வெற்றி செல்வன், தோணி, ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்தவர்.

கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலெல்லாம், தவறாது சர்ச்சையான விசயங்களை பற்றி பேசி பரபரப்பை கிளப்பும் ராதிகா, அண்மையில் கூட பிரபல தெலுங்கு நட்சத்திரம் தன் காலை உரசியதால் கன்னத்தில் பளார் வாங்கிய சம்பவம் குறித்து பேசி ஊடகங்ககளில் அதிகம் பேசப்பட்டார்.


இதனாலேயே இவரை பலரும் சர்ச்சை நாயகி என அழைக்கும் இந்த நேரத்தில், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி மொத்த பாலிவுட்டையே வியப்படைய செய்திருக்கிறார்.

குறிப்பிட்ட திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் போது செயல்பட்ட பெண் உளவாளிகள் பற்றியதாம். அதில் 'நூர் இணையட் கான்' எனும் இந்தியாவை சேர்ந்த உளவாளிப் பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறாராம் ராதிகா அப்தே.


ஏற்கனவே பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நடிகை ராதிகா அப்தேவும் ஹாலிவுட் செல்ல இருப்பது இந்திய திரையுலகுக்கே பெருமை சேர்த்திருப்பதாக பாலிவுட் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.