Breaking News

தான் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக சென்ற நடிகை


கண் சிமிட்டலில் மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ப்ரியா பிரகாஸ் எனும் இளம் நடிகையை நினைவிருக்கிறதா. காலமும் நேரமும் வந்தால் எவ்வளவு பெரிய உச்சத்திற்கும் செல்லலாம் என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டாக விளங்குகிறார் இவர்.

இல்லை என்றால் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வந்த இவர் இன்று இந்தியா முழுவதும் பல முன்னனி இயக்குனர்கள் படங்களில் நடிக்க அழைக்கும் நடிகையாக வளர்ந்திருக்க மாட்டார்.



இன்று பல நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைக்கப்பட்டும் இந்த ஆன்லைன் பிரபலத்திற்கு, தான் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரியிலேயே சிறப்பு  விருந்தினராக கலந்துகொள்ளும் எவருக்கும் கிடைத்திராத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கேரள மாநிலத்தின் திரிசுரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பி. காம் படித்துக் கொண்டிருக்கும் ப்ரியா பிரகாஸ், அந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.



அப்பொழுது, சக மாணவி என்றாலும் இன்று இந்தியாவே பேசும் ஒருவராக வளர்ந்திருக்கும் இவருடன் பிற மாணவிகள் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.