Breaking News

எஸ். ஜே சூர்யாவிற்கு நாயகியாகும் ப்ரியா பவானி சங்கர்


நடிகை ப்ரியா பவானி சங்கர் காட்டில் இப்பொழுது மழை தான். செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் வளம் வந்து மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அழுத்தமாக கால்பதித்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்து குவியுது பட வாய்ப்புகள்.

முதன் முதலில் நடித்த சீரியலிலேயே ரசிகர்களை தன் அழகாலும் நடிப்பாலும் வசீகரிதவர்தான் என்றாலும், மேயாதமான் திரைப்படத்தில் மது என்ற கதாப்பாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச இடத்திலும் குடி பெயர்ந்தார்.


தொடர்ந்து நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதுவரை ஹோம்லி சிட்டி பெண்ணாக மட்டுமே தோன்றியிருந்த இவர் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் மேயாதமான் திரைப்படத்தின் மற்றொரு நாயகியான இந்துஜாவும் நடிக்க இருக்கிறார்.

மேலும் ஒரு நாள் கூத்து திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ். ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் நடித்துள்ள படங்கள் ரிலீசாகும் பட்சத்தில் சினிமா துறையில் இவர் அடுத்த கட்டத்துக்கு செல்வாரா என்பது குறித்து தெரிய வரும்.