Breaking News

என்னது இந்த சீரியல் நடிகை ஸ்கூல் படிக்கிற பொண்ணுதானா?



முன்பெல்லாம் வெள்ளித்திரையில் மார்கெட் போன நடிகைகளே பெரும்பாலும் சின்னத்திரைகளில் நாயகிகளாக நடிக்க முக்கிய தேர்வாக இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய மாடர்ன் உலகத்துக்கு ஏற்றார்ப் போல சின்னத்திரையும் மாரி வருகிறது. வெள்ளித்திரை நாயகிகளைப் போலவே கேரளா, மும்பை என வெளி மாநில அழகிகளை சின்னத்திரையிலும் நடிக்க வைத்து வருகின்றனர்.

சின்னத்திரை நாயகிகளுக்கும் தற்போது தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருப்பதால் சினிமா கனவோடு வரும் இளம் பெண்களும் சின்னத்திரையில் தைரியமாக நடிக்க ஆரம்பித்து விட்டனர்.



அப்படி சின்னத்திரையில் நடித்து பிரபலமாகி வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கும் ஆல்யா மனசா (செண்பா), வாணி போஜன் (சத்யா), ரக்சிதா (மீனாட்சி) ஆகியோரின் வரிசையில் பகல் நிலவு ஷிவானியும் (சினேகா) ஒருவர்.

பார்க்க பப்ளியாக ஒரு கல்லூரி முடித்த இளம் பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர் உண்மையிலேயே 12ம் வகுப்பு தான் படிக்கின்றாராம். இந்த தகவலை இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.



மேலும் 12ம் வகுப்பு படிப்பதால் நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தும் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும் என்னை மேலும் நிறைய சீரியல்களில் பார்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.