Tuesday, 17 April 2018

விராட்கோலி மனைவியின் திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா


நடிகை நயன்தாரா ஹாரர் படங்களின் பிரியை ஆகி விட்டாரோ என்னமோ தெரியவில்லை? தொடர்ந்து அந்த வகை படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே நயன்தாரா நடித்த திகில் படங்களான மாயா, டோரா போன்றவற்றை தொடர்ந்து,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான 'அனுஷ்கா ஷர்மா' நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பரி' எனும் திகில் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.


சூனியக்காரி ஒருவளின் பிடியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தின் கதையினை மிகவும் திகிலாக காட்டி இருந்த இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் 18 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடி வசூலையும் பெற்று வெற்றிப்படமாகவும் அமைந்தது.

ஏற்கனவே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகை நயன்தாரா, முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி உருவாகி இருந்த பரி பட ரீமேக்கிலும் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();