Friday, 13 April 2018

அக்கா மேட்டருக்கு பின்னும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பாரா நயன்தாரா?


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இங்கே பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தோடு வளம் வரும் இவர், இளம் நடிகர்களோடு நடிக்க முடியாத அளவிற்கு அவரின் வயதானது அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. 

இதனாலேயே தற்போது அறம், கோலமாவு கோகிலா போன்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்  சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில், நயன் சிவகார்த்திகேயனுக்கு அக்காவைப் போல இருந்ததாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. 


இதனால் நயன்தார அப்செட் ஆனதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷின் திரைப்படத்தில் நயன்தாராவை சிவகார்த்தியனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து நயன்தாராவின் தரப்பிடம் இயக்குனர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம், என்றாலும் வேலைக்காரன் திரைப்படம் அக்கா சம்பவத்தால், சிவகார்த்திகேயனுடன் நயன் நடிப்பது கடினம் தான் என்கிறது சினிமா வட்டாரங்கள். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();