Breaking News

நடிகர்களின் போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது இதனால் தானா?


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் ஆகியவற்றை வலியுறுத்தி நேற்று (07-04-2018) அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் அறவழி போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு நடிகர்களும் கலந்துகொண்ட நிலையில், ஏன் மற்றொரு உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் முதல் ஆளாக வந்திருந்த நிலையிலும் வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை.



இதனால் அவரின் ஒரு சில ரசிகர்களே அவர் மீது மன வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் கலந்துகொள்ளாததன் காரணம் இதுதான் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு விஷயம் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

அதன் படி நேரடியாக பேசி தீர்க்க வேண்டிய விசயத்திற்கு மௌனமாக போராடுவதில் நடிகர் அஜித்திற்கு உடன்பாடு இல்லை எனவும், அதனால் தான் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்திலும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


பலரோ, 'அஜித் போது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளதவர் இதில் மட்டும் எப்படி கலந்துகொள்வார்?' என கேள்வி எழுப்பிவரும் நிலையில், முன்னதாக ஜல்லிக்கட்டு விசயத்திற்காக நடிகர் சங்கம் நடத்திய மௌன போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்ததை சுட்டிக் காட்டியுள்ளனர் தல அஜித்தின் ரசிகர்கள்.