Tuesday, 17 April 2018

'நடிகையர் திலகம்' பட ஆடை விசயத்தில் மோடியை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்


சென்ற வருடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுமார் 10 லட்சம் மதிப்புடைய ஆடை ஒன்றினை அணிந்தது, சமூக வலைதளங்களில் மிகுந்த சர்ச்சைக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்நிலையில் 'நடிகையர் திலகம்' எனும் பழம்பெரும் நடிகை 'சாவித்ரியின்' வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷின் ஆடைகள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் படி  இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த கௌரங் ஷா என்பவர், நடிகையர் திலகமாக தோன்ற, கீர்த்தி சுரேஷின் ஆடைகளை சுமார் 100 கலைஞர்கள் வடிவமைத்ததாகவும்,

மேலும் உடைகளுக்கு தேவையான துணிகளை காஞ்சிபுரம், கட்வால், வெங்கடகிரி போன்ற இடங்களில் இருந்து வரவழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் சாவித்திரி அவர்களைப் போன்று கீர்த்தி சுரேஷ் தோன்றுவதற்காக, நடிகையர் திலகம் படக்குழு மெனக்கெட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இந்த தகவலை கேள்வி பட்ட சினிமா துறையினர், 'ஆடை விசயத்தில்  10 லட்சம் ரூபாய் செலவு செய்த மோடியை மிஞ்சி விட்டார்கள்' என கருத்து தெரிவித்து வருகின்றனர். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();