Breaking News

என்னது நான் அம்மாவாக போறேனா..? புரளிகளுக்கு முற்று புள்ளி வைத்த காஜல் அகர்வால்


இன்றைய இணைய உலகில் உண்மை தகவல்களை விட புரளிகள் தான் ஜெட் வேகத்தில் பரவுகின்றன. இன்றைய செய்தி எழுத்தாளர்களும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை, பெருகி விட்ட போட்டியின் காரணமாக அதன் உண்மை தன்மையை அறியாமலேயே செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது போன்ற புரளி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் சிக்கி இருந்த வேளையில், மிக வேகமாக அதற்கு பதில் அளித்து உண்மைத் தன்மையினை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.


அதன் படி பிரபல தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான NTRன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும், அதுவும் தமிழக மக்களால் அம்மா என அன்பாக அழைக்கப்பட்ட, முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் என்ற செய்திகள் வெளியாகி இருந்தது.


இது பற்றி அண்மையில் விளக்கம் அளித்திருந்த காஜல் அகர்வால், 'அப்படி ஒரு வாய்ப்பு தனக்கு வரவே இல்லை' எனக்கூறி காட்டுத்தீயைப் போல பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.