Monday, 16 April 2018

மகனுடன் போட்டி போடும் சீயான் விக்ரம்


தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து பல்வேறு வேடங்களில் நடிப்பில் அசத்தியவர் என்றால் அது நடிகர் விக்ரம் தான். 51 வயதிலும் இளமையாக நாயகிகளுடன் டூயட் பாடியும், உடலை வருத்தும் காட்சிகளிலும் தயங்காது நடித்து வரும் இவர், தன் மகன் நடிக்க வந்துவிட்ட நிலையிலும் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றாராம்.

இயக்குனர் கௌதம் மேனனின் துருவ நட்சத்திர படத்தினை தொடர்ந்து சாமி ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து வந்த விக்ரம். அதன் பிறகும் தொடர்ந்து நடிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.


மேலும் 'இது போட்டி போடும் உலகம் இதில் ஒய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை, தற்போது என் மகனே எனக்கு போட்டியாக வந்து விட்டான். நான் உழைக்காமல் ரெஸ்ட் எடுத்தால் என்னை முந்திக் கொண்டு போய் விடுவான்' என தன் மகனையே சினிமாவில் தனக்கு போட்டியாக கருதுவதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.


விக்ரமின் மகனான துருவ், இயக்குனர் பாலாவுடன் 'வர்மா' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு மெகா ஹிட் திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் ரேமேக்காக இந்த திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();