Wednesday, 4 April 2018

விரல் வித்தை நடிகரின் காதல் வலையில் சிக்கிய நல்ல மனசு நடிகை... புரளியே உண்மையாகிய பரிதாபம்


சினிமா பிரபலங்களுக்குள் காதல் மலர்வது ஒன்றும் புதிதல்ல, ஆனால் அதுவே கேப்பே இல்லாமல் நான்காவது முறையாக மலர்ந்ததுதான் 'நீங்க சர்ச்சை நடிகர்தான் பாஸ்' என கோலிவுட் வட்டாரத்தை நடிகரைப் பற்றி கிசு கிசுக்க வைத்துள்ளது.

குறிப்பிட நடிகர் முதலில் சினிமா பிரபலத்தின் மகளையும் அடுத்து சர்ச்சை நடிகையையும், மூன்றாவதாக பப்ளி நடிகை ஒருவரையும் காதலித்தார். என்றாலும் யார் வைத்த கண்ணோ ஒன்று கூட அவருக்கு நிலைக்கவில்லை.

சரி காதல்தான் ஒத்துவரவில்லை, வீட்டில் பார்க்கும் பெண்ணையாவது திருமணம் செய்துகொள்ளலாம் என நடிகர் நினைத்தால், நடிகரைப் பற்றி தெரிந்தததால் ஒருவரும் பெண் கொடுக்க முன்வரவில்லையாம்.



இப்படி வாழ்க்கை எனும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவரை காதல் எனும் வலையை வீசி கரை சேர்த்திருக்கிறார் நல்ல மனசு நடிகை ஒருவர். குறிப்பிட்ட நடிகையுடன் இணைந்து சரக்கு பாடல் ஒன்றினை விரல் விதத்தை நடிகர் வெளியிட்ட போது ஏற்பட்ட நட்பு இன்று காதலாக மலர்ந்துள்ளதாம்.

நடிகரின் லீலைகளை கருத்தில் கொண்டு நீண்ட நாள் யோசனைகளுக்கு பிறகு ஒகே சொல்லியிருக்கும் நடிகை, இப்பொழுது 5 நட்சத்திர ஓட்டலில் மணிக்கணக்கில் நடிகருடன் கடலை வருக்கிறாராம்.



இதற்கெல்லாம் காரணமாக, போகிற போக்கில் 'இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது' என போட்டோ ஒன்றினை போட்டு, கொளுத்திப் போட்டு விட்டு சென்ற நெட்டிசன்கள் இருப்பதுதான் மற்றொரு சுவாரஸ்யமான தகவல்.   

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();