Breaking News

கியாரே..! செட்டிங்கா..? ஒத்தையா அசத்தும் குட்டி வேங்கைய மவன் : வைரல் வீடியோ


நடிகர் ரஜினியின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் காலா. முன்னதாக வருகிற ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்ட இப்படம் நடிகர் சங்க போராட்டத்தின் காரணமாக ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனால் ரஜினி ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் இருக்கும் இவ்வேளையில், 'கியாரே..! செட்டிங்கா..? வேங்கைய மவன் ஒத்தைல நிக்கேன்' என நடிகர் ரஜினி பேசிய காலா பட வசனத்தை கியூட்டாக பேசி இருக்கிறார் சிறுவன் ஒருவர்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் 'குட்டி வேங்கையன் மவன் கலக்கிட்டான்' என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 கடந்த மார்ச் 1ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தின் டீசரை தொடர்ந்து ரஜினி பேசிய குறிப்பிட்ட வசனம் ரசிகர்களிடையே மிகப்பிரபலம் ஆனது. மீம்ஸ் வடிவிலும் சுற்றி வரும் இந்த வசனம், 'இப்படி கியூட்டான சிறுவன் பேச கேட்பது அருமையாக இருக்கிறது' எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.