Breaking News

கவர்ச்சி காட்டி நைசாக சம்பளத்தை உயர்த்திய சிவ கார்த்திகேயன் நடிகை



கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகைகளுக்கு சம்பளத்தை அள்ளித்தர சினிமா துறை எப்பொழுதும் தயாராக இருக்கிறது. என்றாலும் பெரும்பாலான நடிகைகள் 'மார்க்கெட் போய்விடும்' என்கிற பயத்தில் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்ட மறுத்தாலும் பின்னாட்களில் அதே மார்கெட்டினை தக்கவைத்துக் கொள்ள கவர்ச்சியினை கையில் எடுப்பது வழக்கம்.

இதே போன்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார் சிவ கார்த்திகேயன் பட நடிகை ஒருவர். தமிழ் சினிமாவில் இவருக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில் தெலுங்கு திரையுலகம் சில ஆண்டுகளாக கைகொடுத்து உயர்த்திவிட்டது.

இதனால் மீண்டும் இவருக்கு கோலிவுட்டிலிருந்து வாய்ப்புக்கள் தேடி செல்ல ஆரம்பித்தன. என்றாலும் தெலுங்கில் காட்டும் கவர்ச்சியில் பாதியைக் கூட தமிழ் சினிமாவில், தனக்கு மீண்டும் கிடைத்த வரவேற்பை பார்த்து காட்ட மறுத்தார்.

இதனால் இவரின் சம்பளமும் லட்சங்களை தாண்டாமல் இருந்து வந்தது.  'இனிமேலும் கவர்ச்சி காட்ட மறுத்தால் வேலைக்காவது' என்பதனை உணர்ந்த நடிகை இறுதியாக 'எவ்வளவு கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயார்' என தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இதனால் நடிகை எதிர்பார்த்த படியே சம்பளத்தையும் தாராளமாக அள்ளிக் கொடுக்கின்றார்களாம் தயாரிப்பாளர்கள்.