Breaking News

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் கார்த்தி


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது இயக்குனர் பாண்டியராஜின் 'கடை குட்டி சிங்கம்' எனும் திரைப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்து வருகிறார். இப்படத்தின் அசத்தலான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது படக்குழு. அதிலும் குறிப்பாக நடிகர் கார்த்தியின் பைக்கில் விவசாயி என எழுதப்பட்டிருந்த புகைப்படம் மிகவும் வைரலானது.


இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனரான ரவி உடுகலாவின் படத்தில் கார்த்தி நடிக்க போவதாகவும் அத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஒரு செய்தியானது கோலிவுட் வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது.

இது குறித்து சமீபத்தில் பதில் அளித்திருந்த நடிகர் கார்த்தியின் தரப்பு, அந்த தகவலானது முற்றிலும் பொய் எனவும் இயக்குனர் ரவி உடுகலா, கார்த்தியை சந்திக்கவே இல்லை எனவும் விளக்கம் அளித்து புரளிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.


தற்பொழுது நடித்திருக்கும் கடை குட்டி சிங்கத்தினை தொடர்ந்து, ராஜத் ரவி சங்கர் எனும் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்திலேயே கார்த்தி நடிக்க இருக்கிறார். குறிப்பிட்ட திரைப்படத்தில் நாயகியாக நடிகை ராகுல் பரீத் சிங் நடிக்க, நவரச நாயகன் கார்த்திக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.