Friday, 13 April 2018

ஆபிஸ் பாயாக இருந்த கஞ்சா கருப்புவை காமெடி நடிகனாக்கிய இயக்குனர்கள் சண்டை



நடிகர் கஞ்சா கருப்பு இயக்குனர் அமீரின் ராம் திரைப்படத்தில் காமெடியனாக நடித்தபின் சில ஆண்டுகள் காமெடி துறையில் ஒரு கலக்கு கலக்கி வந்தார்.

இப்படி தன் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட 'ராம்' திரைப்படத்திற்கு முன் இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் நடிகர் கஞ்சா கருப்பு ஆபீஸ் பாயாக வேலை செய்து வந்தார் என்ற சுவாரஸ்யமான தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.


ஆரம்பத்தில் ராம் திரைப்படத்தில் கஞ்சா கருப்புவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் கருணாஸ் தானம்.

ஆனால் அந்த சமயத்தில் முன்னால் நபர்களான பாலாவுக்கும், அமீருக்கு இடையே நிலவிய பஞ்சாயத்தில் பாலாவை தாக்கி நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

கருணாஸ்ஸோ பாலாவின் தீவிர விசுவாசி என்பதினால் இந்த சம்பவத்திற்கு பிறகு ராம் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என இறுதி நேரத்தில் விலகி விட்டாராம்.


இதனால் தன் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த கஞ்சா கருப்புவை கருணாஸிற்கு பதிலாக நடிக்க வைக்க, அவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு தொடர்ந்து காமெடியனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.

கஞ்சா கருப்பு அறிமுகமானது என்னமோ பிதாமகன் திரைப்படம் என்றாலும் அதில் அவரின் திறமையை நிரூபித்து மக்களின் மனதில் நிற்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை, அதன் பின் அமீரின் அலுவலகத்தில் பணி புரிந்த போதுதான் ராம் பட வாய்ப்பு கிடைத்து இன்று தமிழக மக்களுக்கு தெரிந்த கஞ்சா கருப்பு உருவாகினார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();