Friday, 13 April 2018

காஜலிடம் காதலை சொல்லி பல்பு வாங்கிய அஜித்தின் நண்பர்


தமிழ் சினிமாவில் இயக்குனர் பாராதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். சினிமா துறையில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக தாக்குபிடித்து விட்ட இவருக்கு தற்போது வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்துவிட்டனர்.

தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாலும் ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் காதல் என்று செய்திகள் வெளியானதாலும் சரியான வரன் கிடைக்காமல் திருமணமும் தள்ளிப்போகிரதாம. இதனால் நடிகை கோவில்களுக்கு சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் சினிமா துறையில் தன்னிடம் லவ் ப்ரபோஸ் செய்த நடிகர் பற்றி தெரிவித்திருந்தார்.


அது யார் என்றால் தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன் போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்த பிரபல தெலுங்கு நடிகரான நவ்தீப் என்பவர்தானம். இவர் ஏகன் படத்தில் நடிகர் நடிகர் அஜித் உடன் சக மானவாராக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.


இவர் காஜல் அகர்வாலுடன் 'சந்தமாமா' எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் போது காதல் கொண்டு ப்ரபோஸ் செய்திருக்கிறார், பின்பு ஓம் ஷாந்தி எனும் படத்தில் இணைந்து நடிக்கும் போதும் முயற்சி செய்திருக்கிறார், இரண்டு முறையும் நோ சொல்லி நவ்தீப்பிற்கு பல்பு கொடுத்திருக்கிறார் காஜல்.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();