Breaking News

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி


தமிழ் சினிமாவில் ரசிகர்களின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட அறிவியல் புனைக்கதை திரைப்படமான 2.0வும், கிராபிக்ஸ் வேலைகள் மீதமிருந்த காரணத்தினால் இந்தாண்டு தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.  

அதனை சரிக்கட்டும் விதமாக பா. ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் முன்னதாக வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி அறிவித்த ஏப்ரல் 27ம் தேதியும் காலா திரைப்படம் வெளிவாராது என தெரிகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கு நடிகர் சங்க போராட்டங்ககளை முன்னிட்டு புதிய படங்கள், படப்பிடிப்புகள் நடைபெறாது என நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அப்போராட்டம் முடிவை எட்டியுள்ள நிலையிலும், முடிந்த உடன் ரிலீஸ் செய்ய சுமார் 30 திரைப்படங்கள் காத்திருகின்றனவாம். இதனால் தியேட்டர்கள் பெறுவதில் சிக்கல் இருக்கும் என்பதை உணர்ந்த படக்குழு ரிலீஸ் தேதியை வருகிற ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறதாம்.


அப்படி ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படும் நிலையில் ரஜினியின் அடுத்த படங்களின் ரிலீசும் தாமதமாகலாம் என முனு முனுக்கிறது கோலிவுட் வட்டாரம்.