Breaking News

IPLஅ நிறுத்தியாச்சி அப்படியே இதையும் பண்ணிடுங்க..! அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் சித்தார்த்


தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் தமிழகத்தில் IPL போட்டிகள் நடைபெறக்கூடாது என்பதையும் வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கட்டா அணிகளுக்கிடையேயான போட்டியின் போது போராட்டங்கள் நடத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்புகளுகிடையேயும் மைதானத்துக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் கிரிக்கெட் வீரர்களை நோக்கி செருப்புகளை வீசினர். தமிழகத்தில் இருக்கும் ஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்ட IPL நிர்வாகம் சென்னையில் நடைபெற இருக்கும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றியது.


இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த், 'IPL போட்டிகளை தமிழகத்தில் நிறுத்தியாச்சி, இதேமாதிரி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்குகள்,அரசியல்வாதிகளுக்கு சொந்தமான டிவி சேனல்களை மூடுவர்களா?

போராட்ட களத்திற்கு கட்சி கொடிகளை கொண்டு செல்லாமல் உங்களால் போராட முடியுமா? தமிழகத்தில் விரும்பதாக விசயங்களும் மனிதர்களும் உள்ளன. தமிழக மக்களாக ஒருங்கிணைந்து போராடுவோம்' என்றிருந்தார்.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் 'காவிரிக்காக போராட்டம் என்ற பெயரில்' அரசியல் விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் விரும்பத்தகாத செயல்களை பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.