Wednesday, 4 April 2018

IPL 2018 பிரமாண்ட தொடக்க விழாவில் நடனமாட இருக்கும் ஒரே தமிழ் நடிகை


உலகளவில் மிகப் புகழ் பெற்ற IPLன், 11வது கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஏப்ரல் 7 முதல் ஆரம்பமாக உள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட தொடக்க விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பாலிவுட் பிரபலங்களான வருண் தவான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், பிரணீட்டி சோப்ரா, ரன்வீர் சிங் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில்,

 கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரன்வீர் சிங் விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக நடிகர் ஹ்ருத்திக் ரோசன் கலந்துகொள்ள இருக்கிறார்.



மேலும் பிரபல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகையான தமன்னாவும் இந்த பிரமாண்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.     


இந்நிலையில் நடனத்தில் கலக்கும் தமிழ் நடிகைகளில் ஒருவரான தமன்னாவும், இந்த பிரமாண்ட தொடக்க விழாவில் நடனமாட இருப்பது தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் சென்ற வருட IPL தொடக்க விழாவில் கலந்துகொண்ட மற்றொரு தமிழ் நடிகையான எமி ஜாக்சனின் நடனம் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();