Thursday, 12 April 2018

திரில்லர் படத்தில் பிக் பாஸ் ஹரீஸ் கல்யாண்



ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையில் ஏங்கி காத்துக்கொண்டிருப்பது அவர்களுக்கான அந்த சரியான நேரத்தைதான். அதை பயன்படுத்திக் கொள்பவர்கள் உச்சத்திலும் தவறுபவர்கள் தரை மட்டத்திலும் இருக்கிறார்கள். 

அப்படி ஏற்கனவே மூன்று படங்களில் நடித்தும், இப்படி ஒரு நடிகர் இருக்கிறாரா என சினிமாத்துறையில் அட்ரசே இல்லாமல் இருந்தவர் ஹரீஸ் கல்யான்.

சரியான சமயத்தில் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பிதிருக்கிறார்.


ஏற்கனவே யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில், சக பிக் பாஸ் போட்டியாளரான ரைசாவுடன் 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.


நடிகர் விஜய் சேதுபதி காயத்திரி நடித்த புரியாத புதிர் திரைப்படத்தினை இயக்கிய, ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் ஹரிஸ் கல்யாணின் இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();