Monday, 2 April 2018

உண்மையான விஜய் ரசிகன்னா இப்படி தான் இருக்கணும் ; சொல்கிறார் GV பிரகாஸ்


நடிகர் மற்றும் இசையமைப்பாளரான GV பிரகாஸ் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என்பது ஊரறிந்த ஒன்று. இந்த தகவலை தன் வாயாலேயே பல இடங்களில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இதனால் ஆரம்பத்தில் நடிகர் அஜித்தின் ரசிகர்களால் விமர்சிக்கவும் பட்டார்.

தற்போது முழு நேர நடிகனாக வருடத்திற்கு ஆறு படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது 'சர்வம் தாள மயம்' எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இசையை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் இவர் தீவிர விஜய் ரசிகனாக நடித்து வருகிறாராம். மேலும் கட்டவுட் வைப்பது, பாலாபிசேகம் செய்வது என நடிகர்கள் கேட்காமலேயே செலவு செய்யும் ரசிகர்களைப் போல அல்லாமல், 'ரசிகர்னா இப்படிதான் இருக்க வேண்டும்' என பலருக்கு பாடம் சொல்லும் விஜய் ரசிகராக நடித்திருகின்றாராம்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();