Tuesday, 3 April 2018

மீண்டும் இணைகிறது தனுஸ் அனிருத் வெற்றி கூட்டணி?



சினிமா துறையில் பலருக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தவர் நடிகர் தனுஸ். அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத்தின் வெற்றிகரமான சினிமா பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் அவர்தான்.

தனுஷின் '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தன் முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றார். மேலும் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து வெற்றி பாடல்களைக் கொடுத்து இந்திய சினிமா துறையிலேயே முன்னணி இசையமைப்பாளராக வளம் வருகிறார்.

ஆரம்பத்தில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் ஆகிய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தார். அனைத்து பட பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையிலும் அவருடைய அடுத்த படங்கள் எதிலும் அனிருத் இடம்பெறவில்லை.



இதனால் 'இருவர்களுக்குமிடையேயான நட்பில் விரிசல் விழுந்துவிட்டது' எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த தகவலை அனிருத் மற்றும் தனுஷ் தரப்பு தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், மீண்டும் இவர்கள் இணையப் போகும் தகவலை அனிருத் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.



இதுகுறித்து பேசிய அனிருத், 'எங்களுக்குள்ளான விரிசல் செய்தி நான் லேடி கெட்டப் போட்டதாக பரவிய புகைப்படம் போல அர்த்தமற்றது. வருகிற 2019ம் ஆண்டில் எங்கள் கூட்டணி மீண்டும் இணைய அதிக வாய்ப்பிருகிறது' என தெரிவித்திருந்தார்.     

இதனால் அனிருத்- தனுஷ் வெற்றி கூட்டணியில் இசையை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();