Breaking News

சாருக்கானுக்கு பாடம் கற்பித்த தோனியின் மகள்


சென்னை கொல்கத்தா அணிகளுக்கிடையேயான IPL போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு போராட்டங்களுக்கிடையே நடந்து முடிந்தது. குறிப்பிட்ட போட்டியில் கொல்கத்தா அணி 202 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் வழக்கம் போல கடைசி ஓவர் வரை கொண்டு சென்று த்ரில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.


இந்த போட்டியைப் பார்க்க நேரில் வந்திருந்த நடிகரும் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான சாருக்கான் போட்டியில் தோற்ற சோகத்தில் இருந்தாலும், மைதானத்தில் தோனியின் மகளான ஷிவாவுடன் விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த புகைப்படங்களில் ஷிவா ஷாருக்கானுக்கு எப்படி சிரிப்பது என்று குறும்பாக சொல்லிக் கொடுக்கிறார். ஷாருக்கானும் அவர் செய்ய சொன்னதைப் போலவே செய்து போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார்.

போட்டி முடிந்த பிறகு தோனியின் மகளுடனான இந்த அழகான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் ஷாருக்கான் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் 200 ரன்கள் குவித்த தன் அணியை பாராட்டியும், அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் தாயாரை சந்தித்தது குறித்தும் பதிவு செய்திருந்தார்.