Wednesday, 4 April 2018

சூப்பர் சிங்கர் to IPL ; விஜய் டிவி பாவனாவின் புதிய அவதாரம்


விஜய் டிவி உருவாக்கிய புகழ்பெற்ற தொகுப்பாளர்களில் முக்கியமான ஒருவர் பாவனா பால கிருஷ்ணன். இவருடன் சூப்பர் சிங்கரில் பணியாற்றிய சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் என பலரும் நடிகர்களாக ஜொலிக்க, இவரோ தற்போது 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்' பக்கம் நடையைக் கட்டி இருக்கிறார்.

அதுவும் உலகப் புகழ் பெற்ற IPL போட்டிகளை தொகுத்து வழங்குவதற்காக. ஏற்கனவே பிரபல நடிகர் RJ பாலாஜி, 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில்' கலக்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அவருடன் இணைந்து கலக்கப் போகிறாராம் நம் பாவனா.



உலகப் புகழ் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறோம் என்பதற்காகவே தன் உடல் எடையை சுமார் 6 கிலோ குறைத்து, நடிகைகள் ஹன்சிகா, அஞ்சலி ஆகியோர் வரிசையில் தற்பொழுது மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறார் பாவனா.



இது குறித்து பேசிய அவர், 'IPL போட்டிகளை தொகுத்து வழங்க இருப்பது என்னுடைய வாழ்க்கையில் மற்றொரு மைல் கல். பலரும் நான் ஏன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டதாக கேள்வி எழுப்புகின்றனர். நான் என்றும் விஜய் டிவி வீட்டு பெண் தான். அந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனைக் கூட நான் தொகுத்து வழங்கலாம்' என தெரிவித்திருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();