Sunday, 8 April 2018

ஐபிஎல் களத்தை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட களமாக்கிய தமிழர்


தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாகவே அம்மாவட்ட மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். என்றாலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய வாசிகளின் உதவியோடு தற்போதுதான் அதன் பாதிப்புகள் தமிழக மக்களுக்கு தெரியவந்துள்ளது.



மீடியாக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாத இந்த பிரச்சனையை தமிழக இளைஞர்கள் இன்று முழு இந்தியாவையே அறிய செய்துள்ளனர். அதனால் அந்த ஆலைக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், நேற்று தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் மக்களை திசை திருப்பும் வண்ணம் இருக்கிறது என பல்வேறு தரப்பட்ட மக்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் சில அரசியல் கட்சியினரோ ஒரு படி மேலே போய் சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடைபெற விடாமல் போராட்டம் நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 'சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றலாமா?' என அதன் நிர்வாகம் யோசித்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று மும்பையில் நடந்த, சென்னை மும்பை அணிகளுக்கான போட்டியின் போது, தமிழக இளைஞர் ஒருவர் 'BAN STRELITE' (ஸ்டெர்லைட்டை தடை செய்) என்ற பதாகையுடன் இடம் பெற்றிருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உலகம் முழுவதும் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாகிறது என்ற நிலையில் இதன் மூலம் உலகம் முழுவதும் இந்த பிரச்சனையை கொண்டுசெல்ல முயற்சித்த அந்த இளைஞரை பலதரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();