Saturday, 14 April 2018

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கு வில்லனான பாகுபலி வில்லன்..!



உலக அளவில் மார்வெல் ஸ்டூடியோசின் சூப்பர் ஹீரோ படங்கள் மிகப் பிரபலம். ரஜினி, விஜய் என பெரிய பெரிய நடிகர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க ஒரு கூட்டம் இருப்பது போலவே இந்த வகையான ஹாலிவுட் படங்களுக்கும் ஒரு கூட்டம் உள்ளது.

அதிலும் குறிப்பாக வருகிற ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருக்கும் அவென்ஜெர்ஸ் இன்ஃபிநிட்டி வார் திரைப்படத்தில் மார்வெல் சூப்பர் ஹீரோஸ் அனைவரும் இணைந்து தோன்ற இருப்பதால், நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர் அந்த ஹாலிவுட் பிரியர்கள்.


இந்திய பிராந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில், வில்லன் தானோசுக்கு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல தெலுங்கு நடிகரும் பாகுபலி படத்தின் வில்லனுமான ராணா.


அவர் உற்சாகமாக தானோசிற்கு குரல் கொடுக்கும், பிகைன்ட் தி ஸ்க்ரீன் காணொளி ஒன்றினை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறது மார்வெல் நிறுவனம்.

குறிப்பிட்ட காணொளியை பார்த்ததும் இந்திய ரசிகர்கள் ஹாலிவுட் வில்லனுக்கே குரல் கொடுத்திருக்கிறார் நம் பாகுபலி வில்லன் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();