Breaking News

பாகுபலிக்கு வில்லனாகும் அருண் விஜய்


பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் 10 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வந்தாலும் முன்னணி நடிகராக ஜொலிக்கவில்லை. என்றாலும் மனம் தளராமல் அந்த திருப்பு முனைக்காக காத்திருந்த அருண் விஜய்க்கு, 'என்னை அறிந்தால்' திரைப்பட வில்லன் வாய்ப்பு கிடைத்தது.

முன்பு போல நாயகனை மட்டும் ரசிக்காமல், அழுத்தமான கதாப்பாத்திரமாக இருந்தால் வில்லனுக்கும் விசில் போடும் இன்றைய தலைமுறை ரசிகர்கள்,  என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜயின் நடிப்பினை பார்த்து சில்லறைகளை சிதற விட்டனர்.


அதன் பிறகு தொடர்ந்து வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், மீண்டும் நாயகனாகவே வளம் வர முடிவு செய்து, ஒரு சில படங்களும் நடித்தார் அருண் விஜய். துரதிஷ்ட வசமாக நாயகன் வேடம் கைக்கொடுக்காமல் போகவே, மீண்டும் அழுத்தமான வில்லன் வேடங்களை தேர்வு செய்ய ஆரம்பித்திருக்கிறாராம் அவர்.

இயக்குனர் மணி ரத்னம் அவர்கள் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்திகள் ஒரு புறம் இருக்க, பாகுபலி நாயகன் பிராபாஸ் நடிக்கும் திரைப்படத்திலும் சத்தமின்றி  வில்லனாக நடித்து வருகிறார் அவர்.

சென்ற ஆண்டு அருண் விஜய் போலிசாக நடித்து வெளிவந்திருந்த 'குற்றம் 23' திரைப்படம், தெலுங்கில் 'கிரைம் 23' எனும் பெயரில் வெளியாக இருக்கிறது, அதன் டிரைலரை வெளியிட சம்பந்தமே இல்லாமல் பாகுபலி நாயகன் பிரபாஸ்  வந்திருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



என்னவென்று விசாரிக்கையில், அவர் நடிக்கும் 'சகோ' எனும் பாலிவுட் படத்தில், வில்லனாக நடிக்கும் அருண் விஜயின் வேண்டுகோளுக்கிணங்க அபுதாபியில் பிசியாக இருந்தும் பறந்து வந்திருந்தது தெரிய வந்துள்ளது.

அதில் பேசிய பிரபாஸ், அருண் விஜய்யின் தங்கை ஸ்ரீதேவி நான் அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமான ஈஸ்வரில் எனக்கு நாயகியாக நடித்திருந்தார், இப்பொழுது அருண் விஜய் என் முதல் பாலிவுட் படத்தில் எனக்கு வில்லனாக நடிக்கிறார்' என குறிப்பிட்டு அருண் விஜய் வில்லனாக நடிக்கும் விசயத்தினை அனைவர்க்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்.