Wednesday, 18 April 2018

நடிகர்கள் அஜித், விக்ரம் இடையே இப்படியொரு பிரச்சனையா..? நீண்ட நாட்களுக்கு பின் வெளிவந்த தகவல்


தமிழ் சினிமா உலகின் ஜாம்பவான்களாக திகழும் நடிகர்கள் அஜித் மற்றும் விக்ரம். இருவரும் இப்போதைய காலகட்டத்தில் இன்றியமையாத நடிகர்கள் என்றாகிவிட்ட நிலையில் இருவருக்கும் இடையே நிகழ்ந்த கசப்பான சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது.

அதன் படி, எப்பேற்பட்ட நடிகனாக இருந்தாலும் தான் நடிக்கும் படத்தில் தான்தான் தனித்து தெரியவேண்டும் என நினைப்பது இயல்பு, அதுபோன்றதொரு மனநிலையில் நடிகர் அஜித், விக்ரமுடன் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்றில் நடந்து கொண்டதாகவும், அதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் செய்தி.


தெளிவாக கூறவேண்டும் என்றால் இருவரும் இணைந்து நடித்த உல்லாசம் திரைப்படத்தின் போது, நடிகர் அஜித் விக்ரம்மை விட கொஞ்சம் பெரிய நடிகர் என்ற நிலையில் இருந்தார்.

அதனால் படக்குழுவும் அஜித் சொல்லைத் தான் கேட்கும் என்பதனால், விக்ரமின் காட்சிகளை மாற்றியமைக்க சொல்வதும், அவரின் நடிப்பை அதிகம் விமர்சனம் செய்வதும் என தொடர்ந்து விக்ரமிற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.


அப்பொழுது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிளவானது சில வருடங்கள் நீடித்தாலும், தற்பொழுது எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் இயல்பாக பழகி வருகிறார்களாம் இந்த இரு ஜாம்பவான்கள். 
Disqus Comments
'