Breaking News

நடிகை தேவயானியின் மகள்களா இது..? இணையத்தை கலக்கும் புகைப்படம்


நடிகை தேவயாணி, 2000மாவது ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் கடந்த 2001ம் ஆண்டு இயக்குனர் ராஜ குமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நாயகி வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையிலும், சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இடையில் சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றினார். தேவயாணி, ராஜ குமரன் ஜோடிக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

பிரபலங்களின் குழந்தைகள் என்றாலே பெரும்பாலும் கேமராவின் கண்ணில் படாமல் வளர்க்கப்படுவது வழக்கம். அதே போல வளர்க்கப்பட்டு வந்த இனியா மற்றும் பிரியங்கா அவ்வப்போது பெற்றோர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதுதான் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், பெற்றோர்களுடன் கலந்து கொண்ட அவர்களின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு முன் மிகச் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது வெளிவந்திருந்த இனியா மற்றும் பிரியங்காவின் புகைப்படங்களை மட்டுமே பார்த்திருந்த ரசிகர்கள், அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை பரவலாக பகிர்ந்து வருகிறார்கள்.