Sunday, 15 April 2018

வாய்ப்புக்காக வேஸ்டி எல்லாம் திருடினேன் ; சூரி ஒப்பன் டாக்


நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் தற்பொழுது காமெடியில் கலக்கி வரும் முன்னணி நகைச்சுவை கலைஞர்களில் ஒருவர். இந்த இடத்தை பிடிப்பது ஒன்றும் அவருக்கு எளிதாக இருந்து விடவில்லை, பிழைப்புக்காக மதுரையில் இருந்து சென்னை வந்து, சினிமாவில் வாய்ப்பு தேடி பத்து வருடங்களுக்கு மேல் அலைந்து, சிறு சிறு வேடங்களில் நடித்துதான் இந்த நிலையை எட்டி இருக்கிறார்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த வேளையில் தன் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து சமீபத்தில் மனம் திறந்திருந்தார் நடிகர் சூரி.


'அப்பொழுது அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு கதாப்பாத்திரங்களை வைத்துதான் வாழ்க்கை ஓடிகொண்டிருந்த காலகட்டம், பெரிய சீரியல் ஒன்றில் கும்பலாக நிற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நடிக்க வருபவர்கள் வேஷ்டி அணிந்து வரவேண்டும் என்பது சீரியல் குழுவின் நிபந்தனை, அப்பொழுது எங்களிடம் வேஷ்டி எதுவும் இல்லை. அதனால் நாங்கள் தங்கியிருந்த காம்பவுண்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரை உருட்டி விட்டு, அவரின் வேஷ்டியை உருவிக் கொண்டு  சீரியலில் நடிக்க ஓடி விட்டோம்.


ஆனால் நாங்கள் இரண்டு பேர் என்பதால் வேஷ்டியை இரண்டாக கிழித்து கட்டிகொண்டோம், 4 முழ வேஷ்டியை கிழித்து இரண்டு பேர் அணிந்திருந்ததால் துண்டை சுற்றியது போல் இருந்தது. அதனால் சீரியலில் இருந்து எங்களை விரட்டி விட்டனர்.

வீட்டிற்கு சென்றால் காணமல் போன வேஷ்டிக்காக அங்கே ஒரு கலவரமே நடந்து கொண்டிருந்தது' என நகைச்சுவையாக தன் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களைப் பற்றி கூறி இருந்தார்.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();