Breaking News

தயவு செஞ்சி இத மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்..! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரபு தேவா


நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என பல்வேறு அவதாரங்கள் கொண்ட பிரபு தேவா, சமூக வலைதளங்களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பிட்ட விசயம் ஒன்றினை செய்ய வேண்டாம் என வேண்டுகோள் ஒன்றினை வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான குலேபகாபலி திரைப்படத்தினை தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் திரைப்படம் மெர்குரி. இந்திய திரையுலகின் முதல் சைலன்ட் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், முதன் முறையாக வில்லனாக மிரட்டி இருக்கிறார் பிரபு தேவா.


வசனங்கள் இல்லை என்பதனால் மொழியும் இல்லை என்ற ப்ளஸ் பாயிண்டோடு, உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடிகர் சங்க ஸ்ட்ரைக் அதற்கு தடைக்கல்லாக அமைந்தது.

இதனால் நஷ்டத்தினை தவிர்க்க, வேறு வழியில்லாமல் தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில் ரிலீஸ்ஆகியது இந்த திரைப்படம்.

இதனால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி இணையதளங்கள், போட்டி போட்டு மெர்குரி படத்தினை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்க முற்படும் என்ற காரணத்தினால், 'தயவு செய்து படத்தினை பைரசி இணைய தளங்களில் பார்க்காதீர்கள், நடிகர் சங்க போராட்டத்திற்கு பிறகு தியேட்டரில் போய் பாருங்கள் என நடிகர் பிரபு தேவா, வீடியோ வடிவில் தனது வேண்டுகோளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.