Breaking News

எங்க வீட்டு மாப்பிள்ளை க்கு முன்னரே அபர்னதி கலந்துகொண்ட டிவி நிகழ்ச்சி - புகைப்படங்கள் உள்ளே



நடிகர் ஆர்யா சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணை தேர்ந்தெடுக்க இருக்கிறார். எங்கவீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

சின்னத்திரை நிகழ்ச்சி என்றால் பெரும்பாலும் ஒருவருக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள் அது போல இந்த நிகழ்ச்சியிலும் அபர்னதி என்ற போட்டியாளருக்கு எக்கச்சக்க ரசிகர்கள். 


அவரின் இயல்பான பேச்சால் ரசிகர்களையும் நடிகர் ஆர்யாவையும் கவர்ந்த அவர் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் சமீபத்தில் போட்டியிலிருந்து எலிமிநேட் செய்யப்பட்டார். அவர் கண்ணீருடன் விடைபெற்றது அவரின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு முன்னரே பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெடி ஸ்டெடி போ' எனும் நிகழ்ச்சியில் அபர்னதி கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த எபிசோட் ஒளிபரப்பானது. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயல்பாக நடந்துகொண்ட அபர்னதியை நடிக்கிறார் என பலரும் விமர்சித்தனர்.


இந்நிலையில் அவர் கலந்துகொண்ட 'ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சியிலும் நடிகர் ஆர்யாவை கூப்பிடுவதைப் போல தொகுப்பாளர் ரியோவையும் வாடா போடா என ஒருமையில் அழைத்தது மனதில் பட்டதை பேசியது அபர்னதியின் உண்மையான குணமே அதுதான் என்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.