Breaking News

விஜயைப் பற்றி தவறாக பேசியவரை அடித்த ட்ராபிக் ராமசாமி


புகழ் பெற்ற இந்திய பொதுநல சேவகர் ட்ராபிக் ராமசாமி, இவர் நடிகர் விஜயைப் பற்றி சர்ச்சையான கருத்து தெரிவித்தவரை அடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தேறியுள்ளது.

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் தயங்காது அதனை சீர்திருத்த களம் இறங்கிவிடுவதால் மக்கள் இவரை ட்ராபிக் ராமசாமி என அழைத்தனர். இவரின் வாழ்க்கை வரலாற்றினை படித்து வியந்த, S.A.சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்கி என்பவர் படமாக்க முடிவு செய்தார்.



குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிகர் விஜயின் தந்தையான S.A. சந்திர சேகர் அவர்கள் ட்ராபிக் ராமசாமியாக நடித்து இருக்கிறார். மேலும் சீமான், விஜய் சேதுபதி, குஸ்பு, விஜய் ஆண்டனி ஆகியோரும் சிறப்பு வேடத்தில் இந்த திரைப்படத்தில் நடித்து இருக்கின்றனர்.



அந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய ட்ராபிக் ராமசாமி அவர்களின் உதவியாளரான பாத்திமா என்பவர், 'படத்தில் ட்ராபிக் ராமசாமி அவர்கள் நடிகர் விஜயை தன் அரசியல் வாரிசாக கை காட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற இருக்கிறது.

நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு ட்ராபிக் ராமசாமி அவர்களின் பெயரை அவர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள்.' என நடிகர் விஜயின் தரப்பினை சாடியிருந்தார்.

அப்பொழுது அருகில் இருந்த ட்ராபிக் ராமசாமி, தன் உதவியாளரின் கருத்தை மறுத்ததுடன் அவரின் முதுகிலும் அடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கூறியது போன்ற காட்சிகள் குறித்து, படக்குழுவும் மறுப்பு தெரிவித்தது.