Tuesday, 10 April 2018

சென்னை - கொல்கத்தா ஐபிஎல் போட்டியில் பந்து பொறுக்க போகும் தமிழக போலீசார்



பல வருடங்களுக்கு பிறகு ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சென்று கொண்டிருக்கும் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்கான போராட்டத்தை உலகம் அறிய செய்ய அந்த கிரிக்கெட் போட்டியை உபயோகிக்க தமிழக அரசியல் கட்சிகள் பல திட்டம் போட்டுள்ளது.


அதனால் குறிப்பிட்ட சென்னை - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டிகளை பார்வையிடப் போகும் ரசிகர்களுக்கு பலத்த கெடுபிடிகளை வித்தித்துள்ளது IPL நிர்வாகம்.



மேலும் ஆயிரக்கணக்கான போலீசாரும் மைதானத்தில் குமிக்கப் பட்டிருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு மைதானத்தின் ஓரத்திற்கு வரும் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் பால் பாய்ஸ் பணிக்கு கூட பாதுகாப்பு கருதி போலிசாரையை நிற்க வைக்க முடிவு செய்துள்ளது IPL நிர்வாகம்.


இந்த செய்தியானது ஊடகங்களில் பரவ, தமிழக மக்கள் பலரும் போலீசாரின் இந்த அவல நிலையைக் கண்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மக்களை காப்பாற்றுவதற்காக இருக்கும் காவலர்கள் ஆயிரக்கணக்கானோரை ஒரு தனியார் அமைப்புக்காக உபயோகிப்பதா எனவும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();