Breaking News

தமிழ் புத்தாண்டில் சாதனை படைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்


நடிகர் விஜய் தமிழகத்தில் எக்கச்சக்க ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர். போழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் இவர் தற்பொழுது மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்களையும் தன் படங்களில் தெரிவித்து வருகிறார்.

அப்படி மக்களை வஞ்சிக்கும் அரசிற்கு எதிராக இடம்பெற்றிருந்த வசனத்தினால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நடிகர் விஜயின் திரைப்படம் மெர்சல். என்றாலும் அந்த பிரச்சனை தடைக்கற்களை படிக்கல்லாக்கி வெற்றி நடைப்போட்டது.


அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆளப் போறான் தமிழன் எனும் பாடலை தமிழர்கள் தலையில் வைத்து கொண்டாடினர். ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த அந்த தமிழருக்கான பாடல், தமிழ் புத்தாண்டான இன்று மாபெரும் சாதனை படைத்து தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.


அப்படி என்ன சாதனை என்றால் தமிழ் திரைப்பட பாடல்களில் இதுவரை எதுவுமே எட்டாத, யூட்யூபில் 35 லட்சம் முறை பார்க்கப்பட்ட ஒரே தமிழ் பாடல் என்பதுதான். இதனை கொண்டாடி வரும் நடிகர் விஜயின் ரசிகர்கள் #AalaporanTamilanHits35MViews என்ற ஹாஸ்டாக்கினை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.