Tuesday, 3 April 2018

வெறும் 500 ரூபாயுடன் ஓடிவந்து சினிமாவில் சாதித்த இளம் நடிகை



சினிமா துறையில் எந்த வித பின்னணியும் இல்லாமல் சாதித்தவர்கள் மிக மிகக் குறைவு. திறமையை மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுப்பவர்களும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

இந்நிலையில் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருந்த 'திசா பதானி' எனும் நடிகை, சினிமா துறையில் இடம் பிடிக்க தான் பட்ட கஷ்டங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். 



சினிமாவில் நடிப்பதை லட்சியமாக கொண்டிருந்த இவருக்கு குடும்பத்தினர் எவரும் உறுதுணையாக இருக்கவில்லையாம், இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய திசா, சினிமா கனவோடு வெறும் 500 ரூபாயுடன் மும்பை வந்ததாக தெரிவித்திருந்தார்.

பின் பிழைப்புக்காக சிறு சிறு வேலைகளை செய்து கொண்டிருந்த இவர் 'லோபர்' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். எதிர்பார்த்த வரவேற்பு அந்த திரைப்படத்தில் அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் அவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.


இதன் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கிசானுடன் 'குங்க்ஃபு யோகா'  எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்று இன்று பாலிவுடில் அதிகம் பேசப்படும் நாயகிகளில் ஒருவராக முன்னேறி இருக்கிறார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();